Sunday, February 20, 2011

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) vs இயற்கை மருந்துகள்

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள
கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி
இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை
அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்
மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்
சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன
குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி

30 வகை வெஜிடபிள் வெரைட்டி பிரியாணி!

30 வகை வெஜிடபிள் வெரைட்டி பிரியாணி!



செய்முறை: அரிசியை நன்றாக ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு – பச்சை மிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து… பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, வடித்த சாதம்
செய்முறை: அரிசியை நன்றாகக் களைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, காய்கறித் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். அரைத்த மசாலா விழுதை இதில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஊறிய அரிசி, தயிர் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு, எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை: உடைத்த கோதுமையில் உப்பு சேர்த்து வேக வைத்து, உதிரியாக வடித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து… புதினா, வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, வேக வைத்த காய்களை சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த கோதுமையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

செய்முறை: காலிஃப்ளவரை உதிர்த்து உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் வைக்கவும். பிறகு, அதை வெந்நீரில் போட்டு எடுக்கவும். சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், லவங்கம் தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உதிர்த்த காலிஃப்ளவர், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் தக்காளி கெச்சப், கொத்தமல்லித்தழை சேர்த்து, வடித்த சாதத்தைப் போட்டு, கிளறி இறக்கவும்.

செய்முறை: பேபி கார்னை வட்ட துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வேக வைத்து, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும். முந்திரியை வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு வறுத்து… பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறிய அரிசி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேங்காய்ப் பால், தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கவும். பிறகு சோளம், கரம் மசாலாத்தூள், புதினா, வறுத்த முந்திரி, உப்பு சேர்த்து வெயிட் போட்டு மூடி, 8 நிமிடம் கழித்து இறக்கவும்.
தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சின்ன வெங்காயம் – ஒரு கப், மராட்டி மொக்கு, அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, புதினா – சிறிதளவு, லவங்கம், ஏலக்காய் – தலா 1, சோம்பு – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன், சில்லி சாஸ் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி – 20, நெய் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… சோம்பு, மராட்டி மொக்கு, அன்னாசி பூவை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை நெய்யில் வதக்கி அரைக்கவும். வெங்காயத்தை சில்லி சாஸ் விட்டு வதக்கி தனியே வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து… அரிசியைக் களைந்து போட்டு, தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் வேகவிடவும். பிறகு, வதக்கிய வெங்காயம், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் மசாலாத்தூள், நெய், முந்திரி, புதினா, எலுமிச்சைச் சாறு, பாலில் கரைத்த குங்குமப் பூ சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, லேசாக கொதித்ததும் இறக்கி அவலைப் போட்டு, சிறிது நேரம் கழித்து வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி சேர்த்து, வடித்து வைத்திருக்கும் அவலைப் போட்டு கிளறி, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு… வெங்காய விழுது, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிரிஞ்சி இலை, ஏலக்காய், லவங்கம், பட்டை சேர்த்து வதக்கி, அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதி வெந்ததும் வறுத்த பனீரை சேர்த்து, தீயைக் குறைத்து, தண்ணீர் வற்றி சாதம் உதிரியாக வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காராமணி – அரை கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், உளுந்து, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காராமணியை ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேக வைத்த காராமணி, உப்பு, எலுமிச்சைச் சாறு, தக்காளி சேர்த்து வதக்கி, சாதத்தை போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
- தேவையானவை: அரிசி – ஒரு கப், நறுக்கிய பீன்ஸ், கேரட் வெங்காயம் – தலா அரை கப், முந்திரி, திராட்சை – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியைக் கழுவி, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி… சீரகம், ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், ஊறிய அரிசி, முந்திரி, திராட்சை, கேரட், பீன்ஸ் சேர்த்து மிதமான தீயில் வதக்கி… கரம் மசாலாத்தூள், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, ஆறு கப் தண்ணீர் விட்டு வேக வைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
-செய்முறை: பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். லவங்கம், ஏலக்காய், பட்டையை பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு… வெங்காயம், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடித்து வைத்திருக்கும் லவங்கம். பட்டை, ஏலக்காயை சேர்க்கவும். காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கிளறி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுது, அரிசி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கைவிடாமல் கிளறவும். பிறகு குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
-
-செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அரிசி, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சாதம் உதிராக வந்ததும் இறக்கவும். சிறிது நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
-செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். குடமிளகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகுத்தூள் போட்டு தாளித்து… வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, சாதத்தைப் போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலை சேர்த்து இறக்கவும்.
-
-தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், முளைக்கீரை – 2 கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, முந்திரி – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியாத்தூள், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா 1, காய்ந்த மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியை உதிராக வடித்து ஆற விடவும். கீரையை அலசி பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு… கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், தனியாத்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, கீரையைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும்வரை கீரையை வதக்கியதும்… சாதம், உப்பு, பட்டை, லவங்கம், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும். இதில் எலுமிச்சைச் சாறை விட்டு கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.
-தேவையானவை: பாசுமதி அரிசி, அரைத்த தக்காளி விழுது – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு – தலா அரை டீஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 6 பல், பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, உரித்த பட்டாணி – கால் கப், அரைத்த முந்திரி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் லவங்கம், பூண்டு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெந்த பட்டாணி, தக்காளி விழுது ஆகியவற்றை அதில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். இந்தக் கலவை நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து… உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த முந்திரி விழுது, சர்க்கரை, வறுத்த அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குக்கருக்கு வெயிட் போட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும்.
-
-செய்முறை: அரிசியைக் கழுவி வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பச்சை மிளகாய் – இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும். சர்க்கரை, குடமிளகாய், முட்டைகோஸ், முளைப்பயறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அஜினோமோட்டோ சேர்க்கவும். கடைசியில் வெங்காயத்தாள், உப்பு, சாதம், சோயா சாஸ் சேர்த்து, அடுப்பை பெரிய தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.
-தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நெய் – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, பச்சை மிளகாய் – 7, பட்டாணி – அரை கப், தேங்காய் துருவல், தனியா – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு, புதினா – அரை கட்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – அரை துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். பட்டாணியை வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளியில் தண்ணீர் விட்டு மூன்றரை கப் அளவுக்கு அரைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் இவற்றை சிறிது நெய்யில் வதக்கி அரைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெயில், தனியா, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லி விழுதையும் சேர்த்து வதக்கி… அரிசி, வேக வைத்த பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, தக்காளி சாறு, உப்பு, தனியா – சீரகப் பொடியைத் தூவி கிளறி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
-செய்முறை: பாசுமதி அரிசியை வேக வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து, வாசனை வரும்வரை வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து, சாதத்தையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.
-
-செய்முறை: கேரட்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், பீன்ஸை அரை விரல் நீளத்துக்கும் நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்துக் கிளறி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அரிசி, பால் ஆகியவற்றை சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு, வேக வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு, கிளறி பரிமாறவும்.
-
-செய்முறை: அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, தீயைக் குறைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மேலே எழும்பி வரும்போது வெங்காயத்தை சேர்த்து வதக்கி… உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் ஊற்றிக் கலந்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
-செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து… அரைத்த வெங்காய விழுது, தேங்காய்ப் பால் சேர்த்து, குக்கரில் வைத்து சாதமாக வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கேரட், மாங்காயைப் போட்டு வதக்கி, வெள்ளரித் துருவலை பிழிந்து எடுத்துப் போட்டு, அன்னாசிப் பழம், ஆப்பிள், உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
-தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – கால் கிலோ, வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 6, குடமிளகாய் – 2, தக்காளி – அரை கிலோ, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி, பூண்டு – 2 பல், ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு – தலா 1, தனியா – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தக்காளியைத் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் மூன்றையும் லேசாக சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுத்து, குடமிளகாய், வெங்காயம், பூண்டு, கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி, அரிசி, உப்பு, தக்காளி விழுது, பொடித்து வைத்த தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா தூளை சேர்த்து, குக்கரை வெயிட் போட்டு மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
-செய்முறை: அரிசியை நன்கு கழுவி… பால், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், ஏலக்காய், லவங்கம், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு லேசாக வறுத்து சாதத்தில் போடவும். கிஸ்மிஸ், டூட்டிஃப்ரூட்டி, பேரீச்சம்பழத்தை நறுக்கி சாதத்தின் மேலாகப் போட்டு, செர்ரி பழத்தை சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.
-
-தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய வெங்காயம், பீன்ஸ் – தலா அரை கப், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா ஒரு கப், பட்டாணி – ஒரு கைப்பிடி, புதினா, கொத்தமல்லி – தலா அரை கட்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி இரண்டரை கப் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து… வெந்த காய்கறிகள், அரிசி ஆகியவற்றை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.
-
-செய்முறை: அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.
-செய்முறை: அரிசியை லேசாக வறுத்து, நன்றாகக் கழுவி, பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, கரம் மசாலாத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த பச்சை மிளகாய் – பூண்டு விழுது, டபுஸ்பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வேகும்வரை வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால் விட்டு… அரிசி, உப்பு சேர்த்துக் கிளறி, வெந்தயக்கீரை சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
-செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய், பட்டை சேர்த்து வதக்கவும். வெங்காயம், கேரட் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். அரிசி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
-செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக சாதத்தை வடித்துக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், இஞ்சி, ஏலக்காய், பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்துடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
-தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் சேர்த்து – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 6 பல், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), மிளகாய் எண்ணெய் (கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாகக் காய்ந்ததும் காய்ந்த மிளகாயைப் போட்டு ஆற விடவும்) – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் – 3, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பயறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
-செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயுடன், பூண்டு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். அடுப்பை பெரிய தீயில் வைத்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களை சேர்க்கவும். அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கி, சர்க்கரை சேர்க்கவும். சாதம், சோயா சாஸ், வெங்காய்த்தாள் சேர்த்துக் கிளறி…. கடைசியில் பயறு, மிளகாய் போட்டு காய்ச்சிய எண்ணெயை விட்டுக் கிளறி இறக்கவும்.


நன்றி : அவள் விகடன் 

Thursday, February 3, 2011

கருவுற்ற பெண்ணின் வயதையும் மாதத்தையும் வைத்து என்ன? குழந்தை என கண்டறியும் சீனமுறை


சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையும் ஒன்று. இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அட்டவணையின் மூலப்படிவம் பீஜிங்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சீனக் காலண்டரும், ஆங்கிலக் காலண்டரும் ஓரளவிற்கு நெருக்கமாக இருப்பதால் ஆங்கிலக் காலண்டருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்கப் பட்ட அட்டவணை இதோ...

குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் & வளர்ச்சி


குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள்
குழந்தைக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
  1. எடை குறைவாகப் பிறத்தல்
    நன்கு போஷிக்கபட்ட கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் என உலகளவில் வரையருக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை கர்ப்பக்காலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம்.
குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.