ஸ்பேர்ட் கட் : நீளமான முகம்,பெரிய கண்கள் கொண்ட பெண்களுக்கு இந்த வகை முடியலங்காரம் நன்றாக இருக்கும். இந்த அலங்காரம் உங்களின் நீண்ட முகத்தை வட்டமாகக் காட்ட உதவும். முதலில் முடியை நாலாபுறமும் சிறுசிறு லேயராக எடுத்து வெட்டவும். நெற்றி பகுதியுலும் சிறிய லேயாராக எடுத்து வெட்டவும். இதனால் பெரிய காதுகளாக இருந்தாலும் அவை மறைந்தது போலத் தெரியும். நெற்றியும் சிறியதாகத் தெரியும்.
இன்வெர்ட் லேயர்டு கட் : இந்த வகை முடியலங்காரம் சதுர வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு ஏற்றது. முதலில் கழுத்துப் பகுதியில் இருக்கும் முடியை சிறிதாக வெட்ட வேண்டும். கழுத்துப் பகுதியை மறைக்கு நீள முடிகளையும் கத்தரிக்கவும், இப்போது சதுரமுகம் வட்ட முகமாய்க் காட்சியளிக்கும்.
ஷார்ட் பாப் கட் : வட்ட முகம் கொண்ட பெண்களுக்கு இவ்வகை முடியலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதில் தலையின் நடுவில் உள்ள முடிகளை மட்டும் விட்டுவிட்டு இருபுறமும் உள்ள முடிகளை வெட்ட வேண்டும். அதே போல நெற்றியின் மேல் உள்ள முடிகளையும் சீராக வெட்டிக் குறைக்கவும்.
ஸ்பைக் கட் : இது எல்லோருக்கும் ஏற்றது. தலையின் நாலாபுறமும் சிறு சிறு லேயர்களாக முடியை எடுத்து வெட்டவும். பின்னர் தலையின் நடுவிலும் முன்புறமும் வெட்டவும்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வகை ஹேர்கட் அழகாகவும் வசதியாகவும் இருக்கும். இந்த முடியலங்காரம் செய்து கொண்டவர்கள் முடியை சிறிது `ப்ளீச்` செய்தால் இன்னும் அழகாகத் தெரியும்.
லேயர் ப்ளாண்ட் கட்: இந்த வகை முடியலங்காரத்தில் பலவிதம் உண்டு. ஹேர் டிரையர் மூலம் பல ப்ளாண்ட் கட் செய்யலாம்.நெற்றியில் முடிக் கற்றைகள் வந்து விழுமாறு அலங்காரம் செய்யப்படும். எல்லா வகை முகத்துக்கும் ஏற்றது இந்த முடியலங்
காரம்.
No comments:
Post a Comment